காட்பாடி ரெட்கிராஸ் வளாகத்தில்இலவச கண் சிகிச்சை முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

காட்பாடி ரெட்கிராஸ் வளாகத்தில்இலவச கண் சிகிச்சை முகாம்!

காட்பாடி ரெட்கிராஸ் வளாகத்தில்இலவச கண் சிகிச்சை முகாம்!
காட்பாடி , செப் 30 -

  வேலூர் மாவட்டம் காட்பாடியில் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சிஎம்சி கண் மருத்துவமனை, மாரநாதா ஜெப கூடுகை, காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் இணைந்து இலவச கண் பரி சோதனை முகாம் இன்று 30.09.2025 காலை 9 மணி அளவில் காட்பாடி ரெட் கிராஸ் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு எம்.ஆல்பர்ட்வேத நாயகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி யின் 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி.சாமுண்டீஸ்வரி குணாளன் ஆகியோர் பங்கேற்று முகாமி னை துவக்கி வைத்தனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரபிராஜன் வரவேற்று பேசினார்.  காட்பாடி ரெட் கிராஸ் அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், முன்னாள் கவுன்சிலர் பா.குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஎம்சி கண் மருத்துவமனையின் முகாம் மேலாளர் ஜான் ஹிட்லர் குழுவினர் கண்  பரிசோ தனைகளை செய்தனர் காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவை துணைத் தலைவர் ஆர்.விஜயகுமாரி பொருளாளர் வி.பழனி மருத்துவக்குழு தலைவர்டாக்டர் வி.தீனபந்து செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், ஆனந்தகுமார், சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இந்த முகா மில் கண்ணுக்குள் லென்ஸ் பொருத்து தல் கண்ணீர் நீர் வடிதல் முதலிய மருத்துவத்திற்கு குறைந்த கட்டணத்தில் வேலூர் சிஎம்சி கண்மருத்துவமைனை யில் பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்டுட்டுள்ளனர். 
 முடிவில் ஆசிரியர் அகஸ்தியன் நன்றி கூறினார்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad