ஆதரவின்றி பரிதவித்த முதியவருக்கு மறுவாழ்வு கொடுத்த நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 செப்டம்பர், 2025

ஆதரவின்றி பரிதவித்த முதியவருக்கு மறுவாழ்வு கொடுத்த நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை


திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா போத்தம்பாளையத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆதரவற்றோரின் நலனுக்காகவே நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை இயங்கி வருகிறது. ரோட்டில் அனாதையாக  விடப்பட்ட ஆதரவற்றோர் மற்றும் ஆதரவில்லா முதியோர்கள் உள்ளிட்ட வர்களுக்கு கரம் நீட்டி உண்ண உணவு கொடுத்து புதிய உடை உடுத்தி சிகை அலங்காரம் செய்து வாழ்க்கை கொடுத்து வரும் நியூ தெய்வ சிட்டி அறக்கட்டளையாகும்.

இந்த அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ் அவர்கள் கூறுகையில் 06/09/2025 சனிக்கிழமை அன்று மாலை 3 மணி சுமார்க்கு காளிமுத்து வயது 65  உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இவரை தங்களது ஆதரவற்றோரின் மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து கொண்டு பராமரிப்பு வழங்கி உதவுமாறு மகிழ் வித்து மகிழ் அறக்கட்டளை மூலம் 15 வேலம்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு தெரிய வந்தது அதன்  பின்னர் காவல்துறை அனுமதி பெற்ற காளிமுத்து என்பவரை நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு ஆதரவு தந்து பராமரிப்பு வழங்கி உதவுமாறு 15 வேலம்பாளையம் காவல் துறையினர் அனுமதி கடிதம் வழங்கி இருந்த இந்த முதியவருக்கு நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து கொண்டோம்

மேலும் இவரது மனைவி இறந்து 22 ஆண்டுகள் ஆகிறதாம் இவருக்கு 2 மகள்கள் உள்ளார்களாம். பேச்சுவார்த்தை ஏதும் இல்லை என்று தான் மட்டுமே வாட்ச்மேன் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்ததாகவும் 6 மாதங்களுக்கு முன்பு சிறு விபத்து ஏற்பட்டது அதில் உடல் நிலை மிகவும் வலுவிழந்து சர்க்கரை நோய் ஏற்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன் வலது  காலில்  விரல் புண் அதிக அளவில் அழுகிய நிலையில் உள்ளது திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவர்கள் ஆலோசனை படி விரல் ஒன்றையும் துண்டித்து எடுத்து விட்டார்கள். 

இதனால் இவர் வேலைக்கு சென்று தன்னை கவனித்துக் கொள்ள முடியாத நிலை என மனவேதனை அடைந்த காளிமுத்துவிற்கு  நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் அடைக்கலம் தந்து உதவியுள்ளோம் என்கிறார் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ்.

இது போன்ற ஆதரவற்றோர்களின் சேவைப் பணியினை   தொடர்ந்து செய்திட உதவுமாறு பணிவன்புடன் கேட்டு

கொண்டுள்ளனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad