ஆற்காடு அருகே கண்டெய்னர் லாரி மோதி விபத்தில் தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 செப்டம்பர், 2025

ஆற்காடு அருகே கண்டெய்னர் லாரி மோதி விபத்தில் தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு!!

ஆற்காடு அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு!!
கே.வி குப்பம் , செப் 15 -

வேலூர் மாவட்டம், கே வி குப்பம் வட்டத் திற்குட்பட்ட மாளியப்பட்டு கிருஷ்ணர் கோவில் தெருவை  சேர்ந்தவர் மணி  - சீத்தாம்மாள் இவர்களின் ஒரே மகனான கோவிந்தராஜ் (எ) வேலு (வயது 32) இவர் திமுக கழகத்தின் கே வி குப்பம் சட்டம ன்றத் தொகுதியின்  தகவல் தொழில் நுட்ப பிரிவின் துணை அமைப்பாளராக உள்ளதோடு தேங்காய் விற்பனை மற்றும் கலை துறையில் பம்பை அடிக்கும் தொழி லையும் செய்து வந்தார். இந்த நிலையில் தேங்காய் வியாபாரம் தொடர்பாக ஆற் காடு நோக்கி வேப்பூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை நெடுஞ்சாலை யில் தனது இருசக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்த பொழுது பின் பக்கமாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தலை நசுங்கி கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த ஆற்காடு நகர காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்த கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு போலிசார்  விசாரணை நடத்தி வருகின்றனர் .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad