இரிடியம் மோசடி சிபிசிஐடி சோதனை கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் பறிமுதல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 செப்டம்பர், 2025

இரிடியம் மோசடி சிபிசிஐடி சோதனை கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் பறிமுதல்!

இரிடியம் மோசடி  சிபிசிஐடி சோதனை கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் பறிமுதல்!
ராணிப்பேட்டை, செப்  15 -

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டை அருகே உள்ள பாடியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. அதிமுக பிரமுகரான இவரது வீட்டில் இரிடியம் மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்று அதிகாலை முதல் 10 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனை காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறை வடை ந்தது.சோதனையின்போது மூர்த்தியின் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.3.19 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங் கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்ப டுகிறது. சோதனை முடிவில் மூர்த்தியை விசாரணைக்காக போலீசார் காரில் அழைத்துச் சென்றனர். சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளனர்.இரிடியம் மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடம் சிபிசிஐடி அதிகாரி கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர். மேலும் இந்த சம்பவம் அதிமுகவில் உள்ள பிற பிரமுகர்களிடமும் அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது. சோதனை யின் பின்னணியில் உள்ள உண்மைகள் விரைவில் வெளியாகும் என்றும் பெரி தும் எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் தரப்பில் இருந்து ஒரு உயர் அதிகாரி கூறுகையில், "இரிடியம் மோசடி தொடர்பான வழக்கின் கீழ் தொடரும் விசாரணையின் ஒரு பகுதியாக பாடியம்பாக்கம் பகுதியில் அதிமுக பிரமுகரின் இல்லத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதுஇந்த சோதனை யின்போது, ரூ.3.19 லட்சம் கணக்கில் வராத ரொக்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ள்ளன. இந்த ஆவணங்கள் மோசடிக்கான ஆதாரங்களாக இருக்க வாய்ப்பு உள்ள தால் அவை மேலதிக ஆய்வுக்கு உட்படுத் தப்படும். மேலும், சம்பந்தப்பட்ட நபரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள் ளோம். விசாரணையின் பின்னணி மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இது ஒரே ஒரு சம்பவம் என்று அல்லாமல் ஒரு பெரிய மோசடிக் கூட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கலாம் என்பதால் இது போன்ற சோதனைகள் மாநிலம் முழுவதும் தொடரும். குற்றவாளிகளாக யார் யாராக இருக்கிறார்கள்? என்பதை விரிவாக கண்டறியும் முயற்சி மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது" என்று சிபிசிஐடி போலீசாரின் தரப்பில் இருந்து ஒரு உயர் அதிகாரிகள்  தெரிவித்தனர்.

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad