கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ளதுபாபா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் நிகல்யன், ஸ்ரீவர்ஷினி மற்றும் சிவசங்கரி ஆகியமூன்று மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற இந்தமூன்று மாணவர்களையும் கடலூர் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்கள் கூறி
மருத்துவத் துறையின் ஆணைகளை வழங்கினார். கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளி) மோகன், பள்ளி நிர்வாகி முனைவர் வைரமணி, செயலாளர் முனைவர் சண்முகம், முதல்வர் திருமதி.ரேவதி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். வருகை தந்து வாழ்த்தியமைக்கு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும், மாணவர்களும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திக்காக கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா செய்தியாளர் த.அம்பிகாபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக