பேரணாம்பட்டு மேல்பட்டி காவல் நிலைய த்தில் போக்சோ வழக்கல் ஒருவர் கைது போலிசார் விசாரணை!
பேரணாம்பட்டு , செப் 7 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மேல் பட்டி காவல் நிலையத்தில் போக்சோ
வழக்கில் ஒருவர் கைது போலிசார் விசா ரணை, மேற்கொண்டு வருகின்றனர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வலத்தூர் அம்பேத்கர் கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் (வயது 54) அதே பகுதியில் சில்லரை கடை நடத்தி வருகி றார் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மூன்று பிள்ளைகள் மற்றும் மருமகள் உள்ளனர்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த (17வயது) பெண் பத்தாம் வகுப்பு படித்து முடித்து வீட்டில் இருந்து உள்ளார் உடல் நிலை சரியில்லை என்று பெண் ணின் பெற்றோர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பரிசோதனை செய்த போது எட்டு மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பது தெரியவந்து ள்ளது.உடனே இதுகுறித்து மருத்துவர்கள் மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.அதன் பேரில் பேரணா ம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு சப் இன்ஸ் பெக்டர் முருகவேல் விரைந்து சென்று பெண்ணிடம் விசாரணை செய்த போது ஆசை வார்த்தை கூறி கஜேந்திரன் என்ப வர் பலமுறை ஏமாற்றி உள்ளார் என்பது போலிசார் விசாரணையில் தெரியவந்து ள்ளது.பின் பேரணாம்பட்டுஇன்ஸ்பெக்டர் பிரபு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக