குடியாத்தத்தில் கோட்டாட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் !
குடியாத்தம் , செப் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இம்மாதத் திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு வரு வாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார் நேர்முக உதவி யாளர் ரமேஷ் வரவேற்றார் இந்நிகழ்ச்சி யில் விவசாய பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் கள் கொத்தபல்லி முதல் பேர்ணாம்பட்டு வரை சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது அதை சீரமைக்க வேண்டும் பேரணாம்பட்டு கானாற்று பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது அவைகளை அப்புறப்படுத்தி அங்கு உள்ள குப்பைகளை சீர் செய்ய நடவடிக் கை எடுக்க வேண்டும் கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டியில் கடந்த இரண்டு மாத கால மாக யூரியா கிடைக்கவில்லை விவசாயி களுக்கு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மாம்பழம் வாழைப்பழம் போன்ற பழ வகைகள் வழங்க நடவடிக் கை மேற்கொள்ள வேண்டும் கோட்டாட் சியர் அலுவலகத்தில் நடைபெறும்விவசா யிகள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு விரி ஞ்சிபுரத்தில் உள்ள வேளாண்மை துறை ஆராய்ச்சி மையம் மேலாளத்தூர் பகுதி யில் அமைந்துள்ள கரும்பு ஆராய்ச்சி மையம் மற்றும் மண் ஆராய்ச்சி மைய அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் இந்நிகழ்ச்சி யில் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க ரசன் தலைமையிடத்து. துணை வட்டாட்சி யர் மஞ்சுநாதன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா கே வி குப்பம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அம்சவல்லி
மற்றும் விவசாய பிரதிநிதிகள் சம்பத் நாயுடு சாமிநாதன் துரை செல்வம் சேகர் பழனி வேலன் உள்ளிட்ட 13 அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக