ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம் மற்றும் பரிசளிப்பு விழா !
குடியாத்தம் , செப் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில், ஆசிரியர் தினம் முன்னி ட்டு, குடியாத்தம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக ளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரிய, ஆசிரியை களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்டம் 3231ன் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே.கே.என். பழனி முன்னிலை வகித்தார். சங்க தலை வர் சந்திரன் தலைமை தாங்கினார். சிற ப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளு நர் வி.சுரேஷ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கெளரவ விருந்தினராக அபி ராமி கலை அறிவியல் கல்லூரி செயலர் எம்.என். ஜோதி குமார் கலந்துகொண்டு உரையாற்றினார். கே.எம்.ஜி. கல்விக்கு ழும செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஜோசப் அன்னையா, மாவட்ட கல்வியறிவு பிரிவு தலைவி அருளரசி, சங்க முன்னாள் தலை வர்கள் சத்திய மூர்த்தி, மேகராஜ், அன்பு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
மொத்தம் 210 ஆசிரிய ஆசிரியைகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை எம்.ஆர்.மணி சி.பி.மகா ராஜன் எஸ்.பரசுராமன் ஜே.தமிழ்ச் செல்வன் ஆகியோர் தொகுத்து வழங்கி னர். அரிகிருஷ்ணன் நன்றி உரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக