ரபேல் விமான உருவத்துடன் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

ரபேல் விமான உருவத்துடன் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

 


ரபேல் விமான உருவத்துடன் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் . 


நீலகிரி மாவட்டம் குன்னூரில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில் ஆப்ரேஷன் செந்துறை குறி வைக்கும் பிரமோஸ் ஏவுகணை ரப்பேல் போர் விமானம் வடிவமைக்கப்பட்டிருந்தன 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை வைத்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது 31ஆம் தேதி நேற்று குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 80 க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்டிருந்தன குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில் ஊர்வலம் தொடங்கி அலங்கரிக்க பட்ட வாகனத்தில் விநாயகர் சிலைகள் அணிவகுத்து வந்தன இதில் முதல் வாகனத்தில் ஆபரேஷன் சிந்துரை குறி வைக்கும் பிரமோஷன் ஏவுகணை மற்றும் ரப்பேல் விமானம் போல் வடிவமைக்கப்பட்டது இதனுடன் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன பெட்போர்டு மவுண்ட் ரோடு வழியாக சென்று மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் காட்டேரி அருகே லாஸ் ஃபால்ஸ் நீர்வீழ்ச்சியில் தீயணைப்பு துறையினர் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகளை கரைக்கப்பட்டன.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad