மானூர் அருகே சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 20 பேர் காயம், மாடு குறுக்கே சென்றதால் விபரீதம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

மானூர் அருகே சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 20 பேர் காயம், மாடு குறுக்கே சென்றதால் விபரீதம்.

மானூர் அருகே சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 20 பேர் காயம், மாடு குறுக்கே சென்றதால் விபரீதம் 

நெல்லை, செப்.1- நெல்லையில் இருந்து மானூர் வழியாக வடக்கு செழியநல்லூருக்கு தினமும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இன்று காலை அந்த பஸ் நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் 28 பயணிகள் பயணம் செய்தனர். 

பஸ்சை டிரைவர் ராஜா என்பவர் ஒட்டி சென்றார். கண்டக்டராக வினோத் என்பவர் பணிபுரிந்து வந்தார். மானூரை அடுத்த பள்ளமடை அருகே அலவந்தான் குளம் பகுதியில் பஸ் சென்றபோது திடீரென சாலையின் குறுக்காக மாடு ஒன்று கடந்து சென்றது. இதனால் மாடு மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் போடவே பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. 

இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து மானூர் போலீசார் அங்கு விரைந்து சென்று பஸ்சுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். 

பின்னர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக பஸ்ஸில் இருந்த டீசல் வீணாக வெளியேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad