திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், வே.வடமலைபாளையம் ஊராட்சி, நாதேகவுண்டன்பாளையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கு வளாகத்தில் கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணியை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் துவக்கி வைத்தார்
இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் அவர்கள், மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) ரகுநாதன் அவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் காஜா மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக