பேரணாம்பட்டு பகுதியில் ஆந்திரா, கர்நாடகா மது பாக்கெட் விற்பனை படுஜோர் நடவடிக்கை எடுக்கப்படுமா!
பேரணாம்பட்டு,செப்.28
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் ஆந்திரா, கர்நாடக மது பாக்கெட் விற்பனை படுஜோர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மையப் பகுதியில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனையில் சமூக விரோதிகள் ஆக்கிரமித்து அங்கு கர்நாடகா ஆந்திரா மது பாக்கெட் விற்பனை நடைபெறுவ தோடு மாலை நேரங்களில் சமூக விரோ திகள் குடித்துவிட்டு மது போதையில் வேலைக்கு சென்று வரும் பெண்களை ஒருமையில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது அந்த பழைய மருத்துவமனையானது பேரணாம்பட்டு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்வ தால் பழைய அரசு மருத்துவமனையில் தற்காலிக காவல் நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பழைய மருத்துவமனையை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து ள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக