குடியாத்தம் வனப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் மண்சாலை அமைத்தவர்கள் கைது ஜேசிபி பறிமுதல் 1 லட்சம் அபராதம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 அக்டோபர், 2025

குடியாத்தம் வனப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் மண்சாலை அமைத்தவர்கள் கைது ஜேசிபி பறிமுதல் 1 லட்சம் அபராதம்!

குடியாத்தம் வனப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் மண்சாலை அமைத்தவர்கள் கைது ஜேசிபி பறிமுதல் 1 லட்சம் அபராதம்!
குடியாத்தம் , அக் 31 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப் பகுதிக்குள் வனத்துறையினர் அனுமதி இல்லாமல் மண் சாலை அமைத்தவர்  கைது வேலூர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பெயரில் குடியாத்தம் வன சரகர் சுப்பிரமணியன் தலைமையில் குடியாத்தம் வனத் துறை யினர் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா காப்பு காடு பகுதியில் வன ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்
அப்பொழுது ஜே சி பி இயந்திரம் மூலம் வனத்துறையினர் உரிய அனுமதி இல்லாமல் தனிநபர்   நிலத்திற்கு செல்ல மண் பாதையாக சமம் செய்து மண் சாலை அமைத்தது கொண்டு இருந்தது தெரியவந்தது.பின்னர் இது குறித்து வனத்துறையினர் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தை சேர்ந்த லிங்கையன் மகன் ராஜ்குமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர் 
மேலும் இவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து , ஜேசிபி இயந்திரத் தை பறிமுதல் செய்துள்ளனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad