குடியாத்தத்தில் ரூ 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா !
குடியாத்தம் , அக் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் வரதரெட்டிபல்லி ஊராட்சி பண்டபல்லி யில் புதிய அங்கன்வாடி மையம் இன்று காலை திறப்பு விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹயான தலைமை தாங்கினார்
ஊராட்சி மன்ற தலைவர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரி சேகர் ஒன்றிய குழு உறுப்பினர் நதியா சின்னப்பன் ஒன்றிய பொருளாளர் பத்ரிநாத் மாவட்ட பிரதிநிதி கே ரமேஷ்
ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஆர் ஜீவா ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் நவீன் கழக நிர்வாகிகள் டி கே பாபு பீமராஜ் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதி யில் மேற்பார்வையாளர் கமலா நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக