பரதராமி வி எஸ் புறம் அருகே பசு மாடு களுக்கு மலட்டுத் தன் மையை நீக்க - இலவசம் மருத்துவ சிகிச்சை முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 அக்டோபர், 2025

பரதராமி வி எஸ் புறம் அருகே பசு மாடு களுக்கு மலட்டுத் தன் மையை நீக்க - இலவசம் மருத்துவ சிகிச்சை முகாம்!

பரதராமி வி எஸ் புறம் அருகே பசு மாடு களுக்கு மலட்டுத் தன் மையை நீக்க - இலவசம் மருத்துவ சிகிச்சை முகாம்!
குடியாத்தம்,  அக் 8 -

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின் பெயரில் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் இன்று தமிழ்நாடு அரசு பால்வளத்துறை சார்பில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு இணையம் மற்றும் வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் இணைந்து நடத்தும் சிறப்பு முகாம் இராஷ்ட்ரிய கோகுல் மெஷின் திட்டத் தின் கீழ் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் பசு மாடுகளு க்கு மலட்டுத்தன்மையை நீக்கும் சிகிச் சை அளிக்கப்பட்டது இதில் மாடுகளுக்கு இலவசமாக ஊசி செலுத்தப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.இதில் பரதராமி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு உரிமையாளர்கள் மாட்டைப் பிடித்து வந்து மாடுகளுக்கு ஊசி செலுத்தினர்.
முகாமிற்கு வேலூர் ஆவின் உதவி பொது மேலாளர் விடியாமார்க்கேரேட் தலைமை தாங்கினார் மேலாளர் நரசிம்மன் முன்னி லை வகித்தார் விரிவாக்க அலுவலர்கள் நாகராஜன் , சுரேஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர்கள் ஆவின் கால்நடை டாக்டர்கள் சிவசங்கரன் , அன்பு ஆகி யோர் மாடுகளுக்கு ஊசி செலுத்தி மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad