உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு 1497 பேர் எழுதினர் : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு 1497 பேர் எழுதினர் :


ஈரோடு மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நேற்று திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி மற்றும் வேளாளர் மேல்நிலைப்பள்ளி மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 1901 பேரில் 1497 பேர் பங்கேற்றனர். 404 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிவறை போன்ற அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கூடுதல் பதிவாளர் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad