மாநகராட்சி உதவி பொறியாளர் டி.பவானி முன்னிலையில் வேலூர் மா நகராட்சி 14-வது வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்!
காட்பாடி , அக் 29 -
வேலூர் மாநகராட்சி மண்டலம்-1 வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் 14வது வார்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள ரெட்கிராஸ் அலுவலகத்தில் 29.102025 நடைபெற்றது. கூட்டத்திற்கு 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி.சாமுண் டீஸ்வரிகுணாளன் தலைமை தாங்கி னார். மாநகராட்சியின் உதவி பொறியா ளர் டி.பவானி முன்னிலை வகித்து பேசினார். காந்திநகர் மக்கள் சேவை சங்கத்தின் தலைவர் மற்றும் குடியிருப் போர் நலச்சங்கத்தின் சார்பில் செ.நா.ஜனார்த்தனன் கோரிக்கை மனுக்களை வழங்கி பேசினார். மேலும் 14வது வார்டு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் எ.கணேஷ், துணைத்தலைவர் கே.மஞ்சுநாதன், லட்சுமிபுரம் குடியிருப் போர் நலச்சங்க தலைவர் ஜெ.சங்கர், செயலாளர் ஆர்.பரசுராமன், பொருளாளர் எஸ்.கிரிராஜன், மக்கள் சேவை சங்க துணை செயலாளர் பா.குணாளன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் பேசினர்.
14வது வார்டு பகுதியில் ரெட்கிராஸ் பின்புறம் உள்ள இடத்தில் பூங்கா அமைத்து தரவேண்டும் என்றும் அதனை காட்பாடி ரெட்கிராஸ் அமைப்பு பராமரிக்க விரும்புவதாகவும் கூறினர்.
மேலும் தெருவிளக்குகள் பல பழுதடைந் துள்ளன அவைகளை புதுபித்து தர கோரினர். லட்சுமிபுரம் இரண்டாவது தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு ஒக்கேனக்கல் குடிநீர் இணைப்பு வழங்ககப்படவில்லை 3ஆண்டுகளாக பலமுறை கோரியும் நிறைவேற்றப் படாமல் உள்ளது. ஏற்கெனவே தார் சாலை போடப்பட்ட ஒரு சில தெருக்களில் பாதாள கழிவு நீர் குழாய், குடிநீர் சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி செய்யப்படவில்லை இதனால் வாகனங் களில் செல்வோருக்கு மிகவும் அச்சுறுத் தலாக உள்ளது.எனவே அவற்றை சரி செய்ய வேண்டும் 14வது வார்டு பகுதிக்கு வரும் 8வது கிழக்கு நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் மிக குறைந்த வாட்ஸ் அளவில் உள்ளது அதிகமான மக்கள் பயன்படுத்தும் சாலை என்பதால் மிக அதிக வாட்ஸ் விளக்குகள் பொறுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கை களை முன்வைத்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக