திருப்பத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாவட்ட இளைஞர் சங்க பொதுக் குழு கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 அக்டோபர், 2025

திருப்பத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாவட்ட இளைஞர் சங்க பொதுக் குழு கூட்டம்!

திருப்பத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாவட்ட இளைஞர் சங்க பொதுக் குழு கூட்டம்! 
திருப்பத்தூர் ,  அக் 29 -

ஏராளமான இளைஞர்கள் கலந்து கூட்டத் தை சிறப்பித்தனர் .

திருப்பத்தூர்  மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார் பாக மாவட்ட இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில்  மாலை 5மணி அளவில் நடைபெற்றது 
இளைஞர் அணி பொதுக்கூட்டத்தில் மாநில இளைஞரணி சங்க தலைவர் கணேஷ்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்  மேலும் திமுக ஆட்சியில் மாவட்ட செயலாளர் ஆக வேண்டும் என்றால் அவர்களுடைய வாரிசுதாரர்களுக்கே மீண்டும் வழங்கப் படும் ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியில் மட்டுமே இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு 80 சதவீதம் இளைஞர்களே மாவட்ட செயலாளராக உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற பெருமையைக் கொண்டது பாட்டாளி மக்கள் கட்சி என பெருமிதமாக கூறினார்  மேலும் திமுக ஆட்சியில் கொடுத்து வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அன்புமணி ராமதாஸ் அனைவரிடம் சுட்டிக்காட்டி வருகிறார் என கூறினார் இந்த நிகழ்ச்சி தலைமையானது டி கே ஆர் கிருஷ்ணன் மாவட்ட இளைஞரணி செயலாளர் மற்றும் திருப்பத்தூர் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் டி கே ராஜா 
மாநில இளைஞரணி சங்கத் தலைவர் கணேஷ் குமார் முன்னாள் எம்எல்ஏ மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ஆனந்தன். மாவட்ட தலைவர் குட்டிமணி. பொறியாளர் பொன்னுசாமி. மாவட்டத் துணைச் செயலாளர் ரமேஷ். நிர்மலா சீதாராமன். நாட்றம்பள்ளி முன்னாள் எம்எல்ஏ ஒன்றிய செயலாளர் மற்றும் இளைஞர்கள் செயலாளர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இளைஞர் களின் பொதுக்கூட்டம் சிறப்பாக நடை பெற்றது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad