திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 அக்டோபர், 2025

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தூய்மை பணியாளர்கள்  ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
திருப்பத்தூர்‌  , அக் 29 -

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தூய்மை பணியாளர்கள்  ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அள்ளி கொடுக்காதீர்கள் கில்லியாவது கொடுங்கள் தமிழக அரசே என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் 500க்கும்  மேற்பட்ட பெண் தூய்மையாளர்கள் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  தமிழ்நாடு‌  ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் 16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதனையெடுத்து தமிழக அரசு கண்டுக்கொள்ளாததால் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து 500க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடி யாக நிறைவேற்ற கோரி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.மேலும் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூபாய் 10,000 ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும் எனவும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீக்குபவர்களின் பனிக்காலத்தினை கருத்தில் கொண்டு சிறப்பு காலம் வரை ஊதியம் ரூபாய் 15,000 வழங்கவேண்டும் 
கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்திட அரசாணியின் 37 வெளியிட்ட பின்னரும் இது நாள் வரை பணிநிறுத்தம் செய்யவில்லை எனவே கணினி உதவியாளர்களை பணி நேரத்திலும் செய்ய வேண்டும் கிராம சுகாதார உறுப்பினர்களுக்கு மாதம் 10,000 ஊராட்சி மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும் மற்றும் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் தூய்மை காவலர் களுக்கு குடும்ப நலநிதி பிடித்தம் செய்து அவர்கள் இருப்பினை ஏதும் போது ரூபாய் 5 லட்சம் வழங்கிட வேண்டும் மூன்று ஆண்டுகள் பணி முடிந்து தூய்மை பணியாளர்களை சிறப்பு காலம் வரை ஊதியத்திலும் 10 ஆண்டுகள் பணி முடிந்தவர்களை காலம் வரை ஊதிய கட்டுக்கும் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாகத்தை துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பெரும் ஊதி யத்தை வழங்கிட வேண்டும் MGNREGS கணினி உதவியாளர்களுக்கு வருதாந் திர ஊதிய உயர்வை அமல்படுத்தி NHIS,GIS,PF ஆகியவை பிடித்தும் செய்ய வேண்டும்மேலும் பத்து ஆண்டுகள் பணி முடிந்து வட்டார சுகாதார ஒருங்கிணைப் பாளர்களுக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலக நிலையிலும் ஊதிய நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும் என 16 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக கோஷங்களை எழுப்பி  போராட்டம் நடத்தினார்கள்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad