முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எச்.சி.எல் நிறுவனம் சார்பில் ரூ200கோடி, கோவில் நிதியியல் இருந்து ரூ100கோடி என 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் திருப்பணி, மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி, நிர்வாக அலுவலக கட்டிடம் என பல்வேறு மெகா திட்ட வளாகப்பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முடிவுற்ற பணிகளான பக்தர்கள் தங்கும் விடுதி, நிர்வாக அலுவலக கட்டிடம், பக்தர்கள் தரிசன வரிசை கட்டிடம் என பல்வேறு கட்ட பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கானொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மெகாத் திட்டப் பணிகளில் அன்னதான கூடம்(ரூ.11.25 கோடி), சலவை கூடம்,(ரூ1.84),நாழிக்கிணறு புனரமைப்பு (ரூ3.05 கோடி) மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கானொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து கோவில் தக்கர் அருள்முருகன் புதிய அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்தார். பக்தர்களுக்கு அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் கோவில் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் கௌதம், கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு உட்பட கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக