காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் “துளிர் வினாடி வினா போட்டி”!
காட்பாடி , அக் 14 -
மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் பரிசுகளை வழங்கினார்
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்தமிழ்நாடு அரசும் பள்ளிக்கல்வித்துறையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் வானவியல் மன்றம் உள்ளிட்ட அறிவியல் செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதல் படி வேலூர் மாவட்ட முதன் மைக்கல்வி அலுவலரின் செயல்முறை களின் படி வேலூர் மாவட்ட அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் வினாடி வினா போட்டிகள் இன்று ஒன்றிய அளவில் காட்பாடி, கணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்றது.
காட்பாடி அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளி யில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காட்பாடி ஒன்றியம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான “துளிர் வினாடி வினா போட்டி” காலை 10 மணியளவில் நடைபெற்றது.ஒன்றிய தலைவர் ஆர். சுதாகர் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கோ.சரளா போட்டி களை தொடக்கி வைத்து பேசினார்.
முன்னதாக ஒன்றிய செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ.கே.தாமஸ் எ சதீஸ்குமார் வினாடி வினா கருத்தாளர்கள் மகா லிங்கம், எல்.சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். வேலூர் மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா. ஜனார்த்தனன், மாவட்ட தலைவர் பே.அமுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினர்.2 அரசு நடு நிலைப்பள்ளிகள் 6 மேல்நிலைப் பள்ளி கள் என மொத்தம் 8 பள்ளிகளில் இருந்து 90 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது அறிவுத் திறமைகளை வெளிப் படுத்தினர். போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கில வழி துளில் மற்றும் ஜன்தர் மந்தர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன. வானவியல், இயற்பியல், உயிரியல், வேதியியல், கணிதம், அறிவியல் தொழில்நுட்பம், அறிவியல் அறிஞர்கள் என்ற தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டன பின்வரும் 6 பிரிவினர் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இளநிலை (6-8 வகுப்பு) தமிழ் வழி பிரி வில் காட்பாடி அரசு மகளிர் பள்ளி மாணவிகளும், ஆங்கில வழி பிரிவில் காங்கேயநல்லூர் அரசு மகளிர் பள்ளி மாணவிகளும் தேர்தெடுக்கப்பட்டனர்.
இடைநிலை (9,10 வகுப்பு) தமிழ் வழி பிரிவில் காங்கேயநல்லூர் அரசு மகளிர் பள்ளி மாணவிகளும் ஆங்கில வழி பிரிவில் காட்பாடி அரசு மகளிர் பள்ளி மாணவிகளும் தேர்தெடுக்கப்பட்டனர்
முதுநிலை (11,12 ஆம் வகுப்பு) தமிழ் வழி பிரிவில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆங்கில வழி பிரிவில் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி களும் தேர்தெடுக்கப்பட்டனர்.
ஆசிரியர்கள் கே.துளசி, பி.சரஸ்வதி, எஸ்.தமிழரசி, கே.ஷர்மிளா, எ.அந்தோனிதாஸ், ஒய்.பார்தீபன் ஆகியோர் பங்கேற்றனர்.கணியம்பாடி ஒன்றிய அளவிலான போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அணைக்கட்டு ஒன்றிய அளவிலான போட்டிகள் வட்டார வள மையத்திலும் நடைபெற்றன.
மாவட்ட அளவிலான போட்டிகள் 15.11.2025 புதன்கிழமை வேலூர் சாய் நாதபுரம் ந.கிருஷ்ணசாமி நிதிஉதவி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என தெரிவித்தனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக