தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, முத்தையாபுரம் வடக்கு தெருவில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்த 2பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் மது பாட்டில்கள் வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் தாளமுத்துநகர் 1வது தெரு முனியசாமி மகன் விக்னேஸ் (32), தேவர் புறம் 2வது தெரு மகராஜா மகன் கருப்பசாமி (23) என்பதும் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 128 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது சட்ட விரோதமாக மது விற்றதாக 2 வழக்குகளும், கருப்பசாமி மீது கஞ்சா, மது விற்பனை, அடிதடி வீடுபுகுந்து திருட்டு உட்பட 11 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ். மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக