தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனிப்பட்ட இடங்களில் ஆடுகள் அறுப்பது தொடர் பாக முக்கிய அறிவிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 அக்டோபர், 2025

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனிப்பட்ட இடங்களில் ஆடுகள் அறுப்பது தொடர் பாக முக்கிய அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனிப் பட்ட இடங்களில் ஆடுகள் அறுப்பது தொடர்பாக முக்கிய  அறிவிப்பு
குடியாத்தம் ,அக் 18 -
 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனிப் பட்ட இடங்களிலும் சிலர் வீடுகளிலும் ஆடுகளை அறுப்பதாக தகவல் வரப் பெற்றுள்ளது இவ்வாறு செய்வது முற்றிலும் தவறான செயலாகும் . ஆடுகளை  குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான சுண்ணாம்புபேட்டை பகுதி யில் இயங்கும் ஆடுவதை சாலையில் தான் ஆடுகளை அறுக்க வேண்டும் இதை மீறும் பட்சத்தில் நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் மூலமாக நடை‌ பெறும் ஆய்வில் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமில்லாமல் இறைச்சி கடைக்காரர்களாக  இருந்தால் உரிமம் ர‌த்து செ‌ய்யப்பட்டு  காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக் கப்படுகிறது. இங்ஙனம் ஆணையாளர் மற்றும் பொது சுகாதார பிரிவு
குடியாத்தம் நகராட்சி

குடியாத்தம் . தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad