திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் கல்லூரி தனியார் பல்கலைக் கழகமாக மாற்ற கல்லூரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்பத்தூர் , அக் 18 -
திருப்பத்தூர் மாவட்டம் அரசு உதவி
பெறும் கல்லூரிகளை தனியார் பல் கலைக்கழகம் ஆக மாற்றும்சட்டத்தினை திரும்ப பெற வேண்டும் என திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஅரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் சட்டத்திருத் தத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசு நேற்று தாக்கல் செய்துள்ளதுஇன்று காலை சட்டமன்ற விவாதத்திற்கு வரும் இந்த சட்ட திருத்தத்தை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) சார்பாக தூய நெஞ்சக் கல்லூரி கிளையின் முன்பாக பேராசிரியர்களது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இச்சட்டம் தனியார் முதலாளிகளை ஊக்குவிப்ப தாகவும் கல்விக் கொள்ளையை ஊக்கிவிப்பதாகவும் கல்விக்கட்டணம் உயர்வுக்கு வழிவகுப்பதாகவும் சமூக நீதிக்கு வேட்டு வைப்பதாகவும் ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவை சிதைப்பதாகவும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் அலுவலர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நிலையிலும் இருப்பதால் இதனை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள் மாநில அளவில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக