பசலிகுட்டை முருகன்கோவிலில் திருப் பணிகளை தொடங்க சட்ட மன்றத்தில் நல்லதம்பி எம்.எல்.ஏ. கோரிக்கை!
திருப்பத்தூர், அக்.17-
திருப்பத்தூர் மாவட்டம் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பேசுகையில், திராவிட மாடல் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோவில்களில் திருப்பணிகள், குடமுழுக்குகள் செய்யப் பட்டுள்ளது. எனது திருப்பத்தூர்சட்டமன்ற தொகுதி, பசலிக்குட்டை முருகன் கோவி லுக்கு திருப்பணிகள் செய்ய அமைச்சர் சேகர்பாபு கடந்த கூட்டத்தொடரில் அறிவித்தார். எனவே, அரசு நிதியும், உபயதாரர் நிதியும் பெற்று உடனடியாக அந்த கோவிலில் திருப்பணியை தொடங்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்து பேசினார்.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதில் அளித்து பேசுகையில், இந்த கோவிலை பொறுத்தளவில், ரூ. 13 கோடியே 40 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இதில் ரூ.7 கோடி அளவிற்கு உபயதாரர் நிதியை வழங்கி இருக்கிறார்கள். மீதி நிதியை பொது நல நிதியில் இருந்து வழங்கு வதற்கு பரிந்துரை வந்திருக்கிறது விரைவில் ஒப்புதல் அளித்து, பணிகளை விரைவுபடுத்தி அவர் கூறியபடி விரை வாக திருப்பணிகளை விரைவாக மேற் கொண்டு குடமுழுக்கு நடத்தித்தரப்படும் என கூறினார். இந்த தகவலை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக