போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 அக்டோபர், 2025

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை.

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின்.

கடந்த 2017 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்ததாக பணகுடி முத்துவிநாயகர் தெருவை சார்ந்த ஜாகிர் உசேன் என்பவரது மகன் ஆஷீக் முகமது ஷேக்(30) மீது நித்திரவிளை காவல் நிலைய குற்ற எண் 06/2017 
u/s Girl Missing @ 366(A), 376, 384, 343 IPC and 6,4,12 of POCSO Act, 4 of TNPWH Act இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள்.
நீதிமன்ற வழக்கு விசாரணை சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், நித்திரவிளை காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad