கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.!!!?
சனாதன ஜாதி வெறி பிடித்த கும்பல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மரியாதைக்குரிய பி ஆர் ஹவாய் மீது உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே செருப்பு வீசிய வழக்கறிஞரை கண்டித்து அக்டோபர் 8ம்தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு நாகர்கோவில் வேப்பமோடு பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம்
செருப்பு வீசிய வழக்கறிஞரை வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் மேலும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திலும் (UAPA) கைது செய்ய கேட்டும் அவருடைய வழக்கறிஞர் பட்டத்தை பறிக்க கேட்டும் .பார் கவுன்சிலில் இருந்து நீக்க கேட்டும் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!
உடனடியாக மோடி அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.சிறையில் அடைக்க வேண்டும்.பட்டியல் சமூகத்தைச் சார்ந்த நீதிபதியை அவமானப்படுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான பட்டியல் சமூக மக்களை அசிங்கிய படுத்தி. இந்திய திருநாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய சங்பரிவார கும்பலைச் சார்ந்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடு இல்லையென்றால் விடுதலை சிறுத்தைகள் எழுச்சி தமிழர் வழிகாட்டுதலின்படி போராட்டத்தை முன்னெடுப்போம்.
உச்ச நீதிமன்ற நீதிபதி பி ஆர் ஹவாய் தலித் என்பதால் எந்த அரசியல் கட்சியும் இதுவரையிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்oலை இது ஒரு சனாதனவாதி மீது செருப்பு வீசி இருந்தால் இந்தியாவே கொந்தளித்திருக்கும் ஆனால் தலித் என்பதால் இந்தியாவே கண்டு கொள்ளவில்லை?
இந்தியா எங்கும் நடக்கக்கூடிய ஜாதி வன்மத்தை கண்டித்தும் சனாதனத்துக்கு எதிராகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக