கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பின் வாசல் முதல் காவல் நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நடைபாதைகள் தற்போது ஆக்கிரமிப்பில் அருகிலுள்ள சில கடைகாரர்கள் தங்கள் விற்பனைப் பொருட்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் விளம்பர பலகைகளை நடைபாதைகளில் குவித்து விட்டு, பொதுமக்களின் இயல்பான நடப்பதற்கான இடத்தை முற்றிலும் மறித்துள்ளனர்.
இதனால் பாதசாரிகள் சாலையின் நடுவே பயத்துடன் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள் என மருத்துவமனைக்கு வருகை தரும் பலர் அன்றாடம் உயிர் அச்சத்துடன் சாலையை கடக்கின்றனர். இதன் விளைவாக பல்வேறு விபத்துகளும் நேர்ந்து வருகின்றன.
பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயிர் ஆபத்து ஏற்படும் முன், நடைபாதைகளை சுத்தப்படுத்தி, பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக