உழவர் சந்தை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் விவ சாயிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 அக்டோபர், 2025

உழவர் சந்தை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் விவ சாயிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கல் !

உழவர் சந்தை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் விவ சாயிகளுக்கு  அடையாள அட்டைகளை வழங்கல் !
குடியாத்தம் , அக் ‌அக் 24 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் உழவர் சந்தை தொடங்கப்பட்டு 25 ஆம்  ஆண்டு வெள்ளி விழாவில் மாவட்ட ஆட்சித்தலை வர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப.  கலந்து கொண்டு  விவசாயிகளுக்கு இனிப்புகள் மற்றும்  அடையாள அட்டை களை  வழங்கினார்.உழவுத்தொழிலில் ஈடுபட்டு வரும் உழவர்களுக்கு உரிய விலை கிடைத்திடவும் பொதுமக்களாகிய நுகர்வோருக்கு தரமான காய்கறிகள் கிடைத்திடவும், அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 23.10.2000 ஆண்டில் குடியாத்தம் உழவர் சந்தை தொடங்கப்பட்டு இன்று 25 ஆண்டு காலம் முடிவடைந்த நிலையில் சிறப்பாக வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. 
இந்நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது. இந்தியாவி லேயே விவசாயிகள் நேரடியாக அவர்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்வதற்காக  ஒரு சந்தையை தமிழ் நாட்டில் தான் உழவர் சந்தை திட்டத்தின் கீழ்  செயல்படுத்தபட்டு வருகிறது. குடியாத்தம்  உழவர் சந்தை 25 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு இன்று 26 ஆண்டை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.உழவர் சந்தையில் வரும் விவசாயிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, மின்னணு எடை தராசு வசதி, குடிநீர் வசதி, குளிர்பதன கிடங்கு வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
குடியாத்தம் உழவர் சந்தையில்  தினசரி சுமார்  15 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்து, 7 இலட்சம் முதல்  8 இலட்சம் வரை விற்பனை  நடைபெறுவது மிகவும் சிறப்பான செயலாகும். ஏறக்குறைய 550 விவசாயி கள் அடையாள அட்டைகளை பெற்று தங்களுடைய விளைபொருட்களை விற்பனை செய்து  வருகிறார்கள். அதிகமான கடைகள் வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டதற் கிணங்க நகராட்சி நிர்வாகத்தினர் 20 கடைகள் அமைப்பதற்கான இடத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இதற்காக ரூ.26 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைகள் மூலமாக மானியத் திட்டங்க ளில் வழங்கப்படும் இடுபொருட்கள் உழவர் சந்தை விவசாயிகளுக்கு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டு வருகிறது.  உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பாரம்பரிய அரிசி வகைகள் போன்றவை நுகர்வோருக்கு கிடைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதிய உழவர்களை உழவர் சந்தைக்கு கொண்டு வர கிராம வாரியாக வாரந் தோறும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. தெரிவித்தார். இந்நிகழ்வில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்  வி.அமுலு விஜயன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, இணை இயக்குநர் (வேளாண்மை)  ஸ்டீபன் ஜெயகுமார், குடியாத்தம் நகர்மன்ற தலைவர்எஸ்.சௌந்தரராஜன், குடியாத்தம் ஒன்றியக்குழுத்தலைவர் எ.இ.சத்யானந்தம், வட்டாட்சியர் பழனி
விவசாய சங்க பிரதிநிதிகள் . எம் சேகர் பழனி வேலன் ஏசி பாபு உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர் இறுதியில். உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் நா. சுதாகர் நன்றி கூறினார் வேளாண் மை அலுவலர் நா.சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad