திருப்பூர் மாநகராட்சி 32 வது வார்டில் மக்கள் குறை தீர்ப்பு சிறப்பு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 அக்டோபர், 2025

திருப்பூர் மாநகராட்சி 32 வது வார்டில் மக்கள் குறை தீர்ப்பு சிறப்பு கூட்டம்



நகராட்சி நிர்வாகச் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் 60 வார்டுகளிலும் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக திருப்பூர் 2-வது மண்டலம் 32-வது வார்டு ஏ.எஸ் பண்டிட் நகர் சமுதாய நலக்கூடம் மஹாலில் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது 

 இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் தங்களது வார்டுகளில் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தருமாறு அவர்கள் கோரிக்கை மனுவாக எழுதிக் கொடுத்தனர் இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டல தலைவர்,32வது திமுக வட்ட கழக செயலாளர் தம்பி ஆர் கோவிந்தராஜ்,உதவி ஆணையர் சக்திவேல், கண்காணிப்பாளர் செல்வகுமார், இளம் பொறியாளர்கள் சண்முகசுந்தரம்,ராஜு, பில் கலெக்டர் ஜெகநாதன், கழக நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, கார்த்திகேயன் , சுரேஷ் பழனிச்சாமி, சாக்கு சம்பத் , சிவசக்திவேல் , குப்புசாமி. தனபால் , பாபு , ராம் குட்டி பிரகாஷ் , மகளிர் அணியினர் சுதா , சகிலா பேகம் மற்றும் ஊர் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad