பள்ளியில் விஞ்ஞான ரீதியாக சாதனை படைத்த மாணவர்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் தர்மராஜா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக பேரவையின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் அகமது சாஹிப் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார். அப்போது திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து டாக்டர் அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளை உருவாக்குவோம். அதற்கு பேரவை துணை நிற்கும் என்றார்.
நிகழ்ச்சியில் தென்மண்டல தலைவர் ஆர் கோடீஸ்வரன், மாவட்ட ஆலோசகர் வன்னிய பெருமாள், மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஷேக் முகமது, மாவட்ட இளைஞரணி தலைவர் அஜித் குமார், துணை செயலாளர் சந்திரன், அண்ணாதுரை ஊர் நிர்வாகி ராஜி வெங்கட் சமுதாய மக்கள் நல இயக்க துணைச் செயலாளர் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து சிறப்பித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக