முதலமைச்சர் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஈரோடு மாவட்ட மாணவிகள் மாநில அளவில் 3 வது இடம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

முதலமைச்சர் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஈரோடு மாவட்ட மாணவிகள் மாநில அளவில் 3 வது இடம்


   மாநில அளவில் 38 மாவட்டங்களை சார்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஈரோடு மாவட்ட மாணவிகள் மாநில அளவில் 3 வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்...

மதுரை தியாகராஜா கல்லூரியில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் விஇடி, வேளாளர் மற்றும் கோபி ஆகிய 3 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சிறப்பாக கிரிக்கெட் போட்டியில் விளையாடி மாநில அளவில் 3 வது இடத்தில் வெற்றி பெற்று பரிசுத்தொகை 3,75,000, சான்றிதழ் மற்றும் மெடல்கள் பெற்று ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்கள்...

மகளிர் கிரிக்கெட் போட்டியில் மாநில அளவில் 3 வது இடத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் சார்பாகவும், சமூக ஆர்வலர்களின் சார்பாகவும், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad