தூத்துக்குடியில் தொழிலாளியிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பூபாலராயபுரத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் ரவிக்குமார் (45) தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக முத்தையாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல், ரவிக்குமாரிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதையடுத்து 3 பேரும் சேர்ந்து எங்கள் ஏரியாவில் வேலை பார்க்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து ரவிக்குமார், போலீசுக்கு போன் செய்வதாக கூறி போனை எடுக்க எடுத்தபோது மர்ம நபர்கள் 3 பேரும் போனை பறித்து உடைத்து சேதப்படுத்தியதுடன் ரவிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து ரவிக்குமார் அளித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்த செல்வம் மகன் முகேஷ் (25), முத்தையாபுரம் திருமாஞ்சிநகர் ஆரோக்யராஜ் மகன் அந்தோணி ராஜ் (22), ராமர் மகன் சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களில் முகேஷ் பழைய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகக் குரல் செய்திகளுக்காக தூத்துக்குடிசெய்தியாளர் கணேஷ்.மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக