நாகர்கோயில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே சிவகாசியில் இருந்து பட்டாசு மற்றும் பிற பொருட்கள் கொண்டு வந்த லாரியும், ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியும் ஆரல்வாய்மொழி அரசு எடைமேடையின் அருகே வைத்து மோதி பயங்கர விபத்து.
இதில் பட்டாசு மற்றும் பிற பொருட்கள் ஏற்றி வந்த லாரி நடுசாலையில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு. லாரியில் கொண்டு வந்த பட்டாசுகள் வெடிக்காததால் பெரும் தீ விபத்தும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு உள்ளிட பொருட்களை விரைவாக அகற்றி வருகிறார்கள்.
செய்தியாளர் தங்கராஜ் திருநெல்வேலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக