தூத்துக்குடி அருகே மின்னல் தாக்கி 4 பேர் காயம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 அக்டோபர், 2025

தூத்துக்குடி அருகே மின்னல் தாக்கி 4 பேர் காயம்.

தூத்துக்குடி அருகே மின்னல் தாக்கி 4 பேர் காயம். 

தூத்துக்குடி முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் குளிக்க சென்ற 4 பேர் மின்னல் தாக்கி காயமடைந்துள்ளனர். முள்ளக்காடு ராஜிவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான பாக்யராஜ் மகன் தங்கமுத்து (18) பொன் முத்து மகன் அன்பரசன் (18) பொன் செல்வன் மகன் ஆனந்த கிருஷ்ணன் (17) ஜான் பால் மகன் பிரின்ஸ் (17) நண்பர்களான இவர்கள் 4 பேரும் முள்ளக்காடு அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று விடுமுறை என்பதால் குளிக்க சென்றனர். 

அப்போது பலத்த சத்தத்தோடு இடி மின்னல் ஏற்பட்டுள்ளது. இதில் சாலையில் சென்ற 4 பேர் மீதும் மின்னலின் தாக்கம் ஏற்பட்டு உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad