தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி திருச்செந்தூர் நகராட்சி 5வது வார்டில் சிறப்பு வார்டு கூட்டம் நடந்தது. வார்டு கவுன்சிலரும், திமுக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளருமான மணல்மேடு சுதாகர் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் ஈழவேந்தன் கலந்துகொண்டு பொது மக்களின் அடிப்படை சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைத்திட கோருதல், சேகரிக்கப்பட்ட குப்பைகளை முறையாக பெற்று அப்புறப்படுத்துதல், தெருவிளக்குகளை பழுது நீக்கம் செய்து தர கோருவது உள்ளிட்டவைகள் குறித்து மக்கள் அளித்த மனுக்கள் மீது 2 வாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.
கூட்டத்தில், மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் அருணகிரி, ஊர்தலைவர் சுடலை, துணைத் தலைவர் ஜெயந்தி நாதன், திமுக நிர்வாகிகள் பட்டு, மதன் ஜெயந்தி, தர்மன், குமார், நைனார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக