ஈரோடு மாவட்டத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நடப்பு ஆண்டில் செப்டம்பர் 25ஆம் தேதி வரை, ஹெல்மெட் அணியாமல் சென்ற 71 ஆயிரம் வாகன ஓட்டிகளுக்கு ரூ. 7.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் இலகு ரக மற்றும் கனரக வாகன விபத்துக்கள் 1,784 நிகழ்ந்து 418 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு 2,410 விபத்துகளில் 697 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்
செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக