பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் வீடுகள் இல்லாதவர்களுக்கெல்லாம் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக குடிசை வீட்டில் இருக்கிறவர்களுக்கு எல்லாம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்டுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் என்று இத்திட்டத்திற்கு பெயரிட்டு ரூபாய் 3 இலட்சம் அரசு மானியமாக வழங்கி வருகிறது.
இன்றைக்கு 4.5 லட்சம் ரூபாயில் இந்த வீடுகள் எழில்மிகு தோட்டத்தோடு மிக அருமையாக வடிவமைக்கப்பட்டு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை எல்லாம் கட்டுவதற்காக சிறப்பாக உழைத்திருக்கும் நாகராஜன் - க்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்! உங்களுடைய சேவை தொடர வேண்டும்.
ஏனென்றால் மொத்தமாக இந்த வீடுகள் எல்லாம் ஒரே மாதிரியான ஒழுங்கான வடிவமைப்புடன் கட்டப்பட்டு மிக அழகாக உள்ளது. ஆகையால் புதிய வீட்டில் குடியிருக்கிற அனைவரும் எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டில் 1673 வீடுகள் கட்டுவதற்கு ஒதுக்கிடப்பட்டு எல்லா இடங்களிலும் கட்டப்பட்டு வருகிறது. இந்த வருஷம் 2025 – 26 ஆம் ஆண்டில் 1700 வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு எல்லா இடங்களிலும் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளும் இயல்பாக வெளியில் சென்று வருவதற்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலி கருவி, பேட்டரி வீல் சேர், உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டங்களின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டு பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை, செயற்கை அவயங்கள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் வீல் சேர் உள்ளிட்டவை பெறுவதற்க்காக நீங்கள் எல்லாரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மனு அளித்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நிச்சயமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்குவார். அதுபோல பட்டா இல்லாத மாற்றுத்திறனாளி, மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்திருக்கிறவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் தகுதியுள்ள விடுபட்ட பயனாளிகளும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பட்சத்தில் உங்களுக்கும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளி நலத்துறையை தன்னுடனே வைத்துக் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். நீங்கள் அவருடைய சேவையை என்றும் நினைவில் கொள்ள வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது :-
வீடுகள் எல்லாம் அற்புதமான விதத்தில் அழகுறவும் தரமாகவும் சிறப்பாக கட்டி நமது மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது,
மாற்றுத்திறனாளிகளினுடைய தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த பணிகளை எல்லாம் செய்து கொடுத்திருக்கிறார்கள். நமது பகுதி உள்ளாட்சித் துறை சார்ந்த அலுவலர்கள் குறிப்பாக கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டவர்கள் இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஃபேவர் பிளாக் சாலை அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், பல்வேறு விதமான உட்கட்டமைப்பு கழிவுநீர் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இங்கு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சி எடுத்து பல்வேறு திட்டங்களில் இருந்து நிதிகளை எல்லாம் பெற்று இந்த இடத்தை ஒரு அற்புதமான குடியிருக்கும் பகுதியாகவும், ஒரு வசதி மிகுந்த இடமாக மாற்றி தர வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்து இருக்கக்கூடிய நமது அலுவலர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கும் விதமாக இந்த வீடுகளில் எல்லாம் நீங்கள் குடியேறி மகிழ்ச்சியோடு வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பெற்று வாழ வேண்டும் என்று உங்களையெல்லாம் வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், கோவில்பட்டி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா. முத்துகுமார், ஸ்டீபன் ரத்தினக்குமார் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக