தசரா திருவிழா முடிந்த நிலையில் குலசை முத்தாரம்மன் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 அக்டோபர், 2025

தசரா திருவிழா முடிந்த நிலையில் குலசை முத்தாரம்மன் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி.

தசரா திருவிழா முடிந்த நிலையில் குலசை முத்தாரம்மன் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத் துறையினர் அறங்காவலர் குழுவினர் பங்கேற்பு 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம்  குலசேகரன் பட்டினத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் . இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கி 2ம் தேதியுடன் நிறைவடைந்தது.  

இதனைத் தொடர்ந்து  கோவில் உண்டியல்களை திறந்து எண்ணிக்கை பணி நேற்று காலை  தொடங்கியது. சங்கரன்கோவில் சங்கரநாராயண  சுவாமி கோயில்  துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்  கோமதி முன்னிலையில் உண்டியல் எண்ணிக்கை பணி தொடங்கியது. இந்தப் பணி  தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் .

அதன் பின்னரே  உண்டியல் எண்ணிக்கை வருவாய் முழு விவரம் தெரிய வரும். இந்தப் பணியின் போது  அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், செயல் அலுவலர்  வள்ளிநாயகம், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், உடன்குடி திமுக பிரமுகர் ஹரிகிருஷ்ணன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad