அகில இந்திய பி எஸ் என் எல் ஓய்வூதி யர் நலச் சங்கத் தின் 8வது தமிழ் மாநில மாநாடு!
காட்பாடி , அக் 6 -
வேலூர் மாவட்டம் அகில இந்திய பி எஸ் என் எல் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் 8வது தமிழ் மாநில மாநாடு காட்பாடி காந்தி நகர் ரங்காலயா திருமண மண்ட பத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் அகில இந்திய தலைவர் டி. கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஞாயிற்றுக்கிழமை பொது அரங்கில் பொதுச்செயலர் வரபிரசாத் உரையாற்றி னார். மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் வி. சாமிநாதன் தலைமை தாங்கினார். தமிழ் மாநில ஆலோசகர் வி. இராமராவ் முன்னி லை வகித்தார். மாநில அமைப்பு செயலா ளர் வி.எஸ். முத்துக்குமரன் வரவேற்புரை ஆற்றினர். அகில இந்திய துணைத் தலைவர் கே.முத்தியாலு உரையாற்றி னார்.மாநில செயலாளர் எஸ்.சுந்தர கிருஷ்ணன் செயல்பாட்டறிக்கையைச் சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் எஸ். காளிதாஸ் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தார். பிஎஸ்என்எல் வேலூர் முதன்மை பொது மேலாளர் ஏ. வி. ஸ்ரீ குமார், ஜாயின்ட் சி.சி.ஏ. கே. கௌதமி பாலாஸ்ரீ, மாநில செயலாளர் (செ. தொ) சி. ஒளி, தமிழ் மாநில செயலாளர் டி.குழந்தைநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பேசினார்கள்.மரிய சிவானந்தம் எழுதிய "அருந்தவச்செல்வி" என்ற மணிமேகலை யின் கதை நூலை கே. கௌதமி பாலா ஸ்ரீ வெளியிட கே. வெங்கட்ராமன் (முதன்மை பொது மேலாளர் -ஓய்வு) பெற்றுக் கொண்டார். அகில இந்திய பொருளாளர் டி.எஸ். விட்டோபன், அகில இந்திய உதவி செயலாளர் பி.ஜெயரா மன் அகில இந்திய அமைப்பு செயலா ளர்கள் பி. வேணுகோபால், பி.அருணாச் சலம், அகில இந்திய உதவிப் பொரு ளாளர் வி. லதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். அகில இந்திய பொதுச் செய லாளர் வி. வரப்பிரசாத், அகில இந்திய துணைத் தலைவர் ஆர். எஸ். என். மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் புதிய மாநில அமைப்பு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டின் முக்கிய தீர்மானங்கள்:
1) மத்திய அரசு ஓய்வூதிய மாற்றத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
2) வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஓய்வூதியர் அனவைருக்கும் மருத்துவ சேவை அளிக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற துணை பொதுமேலாளர் கோ.சுவாமிநாதன், ஓய்வுபெற்ற பள்ளிக்கல்லூரி ஆசிரியர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் செ.நா.ஜனார்த் தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் கே. அல்லிராஜா மற்றும் ஜி. ராஜ்குமார் நன்றி கூறினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக