ஏலகிரி மலையில் 87 லட்ச மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து அடிக்கல் நாட்டு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 அக்டோபர், 2025

ஏலகிரி மலையில் 87 லட்ச மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து அடிக்கல் நாட்டு விழா!

ஏலகிரி மலையில் 87 லட்ச மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து அடிக்கல் நாட்டு விழா! 
திருப்பத்தூர் , அக்‌13 -

காணொளி காட்சியின் வாயிலாக துவக்கி வைத்த முதல்வர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை எடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது மேலும் இது மிகவும் தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. இந்த நிலையில் ஏலகிரி மலையில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண் டும் என கோரிக்கை எழுந்த நிலையில் 
ஏலகிரி மலை புங்கனூர் ஏரி பகுதியில் அமைந்துள்ள படுக இல்லத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை யில் இருந்து காணொளி காட்சியின் வாயிலாக ஏழு லட்சம் மதிப்பீட்டில் வளர் ச்சி பணிகள் குறித்து அடிக்கல் நாட்டு  விழாவை தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி யர் சிவசௌந்தரவல்லி மற்றும் ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் சுற்றுலா வளர்ச்சி பணிகளுக் கான  குத்துவிளக்கு ஏற்றி பணியை தூக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மிதக்கும் படகு ஏறும் மேடை ,வரவேற்பு வளாகம்,பாதுகாப்பு வேலி, புல்தரை அமைத்தல், அமரும் இருக்கைகள்,மின்விளக்குகள் உள்ளிட்ட வைக்கு  பூமி பூஜை போட்டப்பட்டது. இதில் ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் சத்யா சதீஷ்,ஏலகிரி மலை தலைவர் ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி ராஜஸ்ரீ கிரி வேலன், பொன்னுரங்கம். மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆனந்தன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

 செய்தியாளர்
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad