அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப் படுத்த துளிர் திறனறிதல் தேர்வுகள் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு கூட்டம் தீர்மானம் !
வேலூர் , அக் 13 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டத் தில் அறிவியல் கண்யோட்டத்தை அகிப் படுத்தும் நோக்கில் துளிர் திறனறிதல் தேர்வுகளை மாநில அளவில் நவம்பர் மாதத்தில் நடத்த தீர்மானித்துள்ளது.
மதுரை மூட்டா அலுவலகத்தில் நடை பெற்ற கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் டி.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ். முகமது பாதுஷா செயல்பாட்டு அறிக்கை யினை சமர்ப்பித்து கிளை, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில மாநாடு நடத்து வது குறித்து முன்மொழிவுகளை கூறினார். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் எஸ் சுப்பிரமணி முன்னிலை வகித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினரும் வேலூர் மாவட்ட செயலா ளர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் மாவட்ட செயல்பாடுகள் குறித்து சமம் ஆரோக்கிய இயக்கத்தின் மாநில மாநாட்டினை வேலூரில் நடத்த ஒப்புதல் அளித்தும் பேசினார்.மாநில நிர்வாகிகள் மு.மாணிக்கத்தாய்,எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், எம்.தியாகராஜன், எஸ்.டி.பாலகிருஷ் ணன், தினகரன், எல்.நாராயணசாமி பேராசிரியர் சோ.மோகனா, வடசென்னை மாவட்ட செயலாளர் அரவிந்த், குமரி மாவட்ட செயலாளர் சிவஸ்ரீ.ரமேஷ் உள்ளிட்ட 38-மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்று பேசினர்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
1. 34 ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாட்டை டிசம்பர் மாதம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
2. அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் துளிர் வினாடி வினா மற்றும் திறனறிதல் தேர்வுகளை நவம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிப்பது
3. கிளை, ஒன்றியம், மாவட்ட அளவிலான மாநாடுகளை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிப்பது என்றும் ஜனவரி மாதம் விருதுநகரில் மாநில மாநாட்டை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது
முன்னதாக மதுரை மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி வரவேற்று பேசினார் மாநில பொருளாளர் எஸ்.சுதாகர் நன்றி கூறினார்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக