திருப்பூர் பிரிட்ஜ்வே
காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் சங்க நிறுவன தலைவர் ஜி. கே. விவசாய மணி என்கின்ற ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் சுயக்கட்டுப்பாடு என்ற தலைப்பில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சங்க தலைவர் ஜிகே விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் பேசியதாவது
மனித வாழ்க்கைக்கு சுய கட்டுப்பாடு மிக முக்கியமான ஒரு தேவையாகும் நமது குழந்தைகளை சிறுவயது முதல் கொண்டு சுய கட்டுப்பாடுகளை சொல்லி கொடுத்து வளர்த்து வர வேண்டும் அப்போதுதான் அவர்களின் பிற்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் ஒவ்வொரு சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் சுய கட்டுப்பாடு கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் விவசாயத்தில் விவசாயி பயிர் விளைவிக்க விதை போடும் போது கை நிறைய அள்ளி ஒவ்வொரு விதையாக போட வேண்டும் அப்போதுதான் பயிர் தனி தனியாக சீராக முளைக்கும் அதேபோல் பயிருக்கு உரம் சிறிது சிறிதாக தேவைப்படும்போது போட வேண்டும் அதிகமாக அவசரப்பட்டு போட்டால் பயிர் கருகிவிடும் அதேபோல் கட்டுப்பாடு இல்லை என்றால் வாழ்க்கை சிறப்பாக இருக்காது இது அனைவருக்கும் பொருந்தும் ஆகவே சுய கட்டுப்பாடுகளை நம் குடும்பத்திலும் நமது சங்கத்திலும் சங்க செயல்பாடுகளிலும் கடைப்பிடிக்க வேண்டும் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதே சங்கத்தின் நோக்கமாகும் இவ்வாறு கூறினார் மேலும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பான முறையில் தங்களது வாழ்க்கை முறையை அமைக்க வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டுதல்களை ஒவ்வொரு கலந்தாய்வு கூட்டத்திலும் ஒவ்வொரு தலைப்பில் பேச வைக்கிறார் தலைவர் ஜிகே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் நல்ல வழிமுறை வகுத்து பேசும் பயிற்சியை கொடுத்து பெண்களுக்கு துணிவை கொடுத்து குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியராய் பயிற்சி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது விழா முடிவில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக