நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மாநில அரசை தாக்கி பத்திரிகையாளர் களுக்கு பேட்டி!
மாநில அரசு திட்டங்களில் முறைகேடு நடப்பதில்லை! மத்திய அரசுதிட்டங்களில் பணத்தை சண்டை போட்டு வாங்க வேண்டிய நிலைமை உள்ளது! மல்லகுண்டா பகுதியில் 100 சதவீதம் சிப்காட் அமைக்கப்படும்! எம்பி உறுதி! இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர் கள் மட்டுமே சிப்காடை எதிர்க்கின்றனர் என பேட்டி!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழாவது மாடியில் உள்ள கூட்டரங்கில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து துறை அதிகாரிக ளுடன் டீஷா மீட்டிங் (DISHA MEETING) வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சிஎன் அண்ணாதுரை
திருப்பத்தூர் மாவட்டத்தை ஆக்கப்பூர்வ மாக எடுத்துச் செல்லவும் கடைக்கோடி மக்களுக்கு திட்டங்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக் கப்பட்டது. அடுத்த மீட்டிங்குள் நூறு சதவீதம் இலக்குகளை அடைய வழிவகை செய்யப்படும் திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 95 சதவீதம் இலக்கு கள் முடிவடைந்துள்ளன இதுபோல் தமிழ் நாட்டில் எந்த மாநிலத்திலீம் நடைபெற வில்லை மத்திய மாநில அரசு திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று அடைவதில் லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களிலும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைக்கவும் வழிவகை செய்துள்ளோம் மாநில அரசு திட்டங்கள் நிதி ஒதுக்கிய பின்பே டெண்டர் விடப்படும் இதன் காரணமாக முறைகேடு நடக்க வாய்ப்பில்லை மேலும் மத்திய அரசு திட்டமான 100 நாள் திட்டம் NRGS திட்டத்திற்கு பணத்தை கூட மத்திய அரசிடம் சண்டை போட்டு வாங்க வேண்டிய நிலைமை உள்ளது ஆனால் மாநில அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய பின்பு டெண்டர் விடப்படுகிறது.
மல்லாகுண்டா பகுதியில் தொழிற் பூங்கா (சிப்காட்) நூறு சதவீதம் அமைக்கப்படும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிப்காட் வேண்டாம் என மனு அளித்துள் ளனர் ஆனால் அங்கு சிப்காட் அமைத் தால் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதா ரம் வளர்ச்சி அடையும் எனவே அங்கு சிப்காட் அமைத்தே தீர்வோம் எனவும் பேட்டியளித்தார்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக