வேலூர் மாவட்டத்தில் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!
வேலூர் மாவட்டம் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் முதியோர் மற்றும் ஓய்வூதி யர் பாதுகாப்பு தினம் ஆண்டு தோறும் அக்டோபர் ஒன்றாம் தேதியை உலக முதியோர் மற்றும் ஓய்வூதியர் பாதுகாப்பு தினம் முன்னிட்டு மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 01.10.2025 இன்று காலை பத்து முப்பது மணி அளவில் வேலூர் பிஎஸ்என்எல் ஊழியர் அலுவலகம் எதிரில் மாபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஓய்வூதியர் களை பாதிக்கும் பென்சன் வேலிடே சன்-2025 சட்டத்தை ஒன்றிய அரசு உடன டியாக இரத்து செய்ய வேண்டும், பழைய பென்சன் திட்டம் அனைவருக்கும் அமல் படுத்த வேண்டும், முதியோர்களுக்கு தரமான மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, குடியிருப்பு மற்றும் தரமான குடிநீர் வசதிகள் உறதி செய்யப்பட வேண்டும் தனியார் கொள்ளைக்கு ஓய்வூதியர்க ளின் நிதியைத் திறந்து வடுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூ தியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தோழர் பி.லோகநாதன் அனைவரையும் வரவேற்றார்.ஆர்ப்பாட் டத்தில் கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.நா.ஜனார்த் தனன் அகில இந்திய அஞ்சல் ஆர்.எம் எஸ் ஓய்வூதியர் சங்க சார்பில் அதன் மாவட்டச் செயலாளரும் நமது கூட்டமைப் பின் மாவட்ட பொருளாளருமான எ. கதிர்அகமது, ஆயுள் காப்பீட்டு கழக ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் டி.செந்தில்வேல், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கு. தருமன் , அரசு போக்குவரத்து துறை ஓய்வூதியர் சங்க ஜி.ஆர்.கோவிந்தசாமி அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பி. முருகன் தெற்கு ரயில்வே ஓய்வூதியர் சங்க கோட்ட உதவிச் செயலாளர் டி.பிரபாசந்தர் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
சிறப்புரையாக தமிழ்நாடு அரசு அனைத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி அவர்க ளும், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநிலத்தலைவர் சி.ஞானசேகரன் அவர்களும் பென்சனர் களின் இன்றைய நிலை குறித்தும் இன்றைய ஒன்றிய அரசாங்கம் பென் ஷனை நிறுத்த முயற்சிப்பதை குறித்தும் மிக விரிவாக பேசினர்.முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை ஓய்வூதியர் நலச் சங்கத்தின் மாவட்ட உதவிச் செயலாளர் தோழர் டி.சேகர் அவர்களின் தாயாரின் மறைவிற்கும் கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும், எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேருக்கும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப் பட்டது. இறுதியில் ஆயுள் காப்பீட்டு கழக ஓய்வூதியர் சங்க ஆர்.கேச வன் நன்றி கூறினார். 20க்கும் மேற்பட்ட பெண் தோழியர்களும் உள்பட நூற்றுக் கும் மேற்பட்ட தோழர்களும் ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.பி.லோகநாதன், மாவட்ட செயலா ளர். மத்திய மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக