பஞ்சாப்பில் வெள்ளி பதக்கம் வென்ற திருப்பத்தூர் மாவட்ட வீராங்கனைகளு க்கு மாலை அணிவித்து மரியாதை!.
திருப்பத்தூர் , அக் 1
திருப்பத்தூர் மாவட்டம் பஞ்சாப் மாநிலத் தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய அளவிளான வில்வித்தை போட்டி நடைபெற்று உள்ளது. அதில் திருப்பத் தூர் கிங் வில் வித்தை அகாடமியை சேர் ந்த வில் வித்தை வீராங்கனை மாணவி கள் 3 பேர் பஞ்சாப்பில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான தேசிய வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றுள் ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில்இருந்து சென்ற 3 மாணவிகளும் வெள்ளி பதக்கம் வென்று வீடு திரும்பிய அவர்களுக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வீராங்கனைகளுக்கு அவர்களது பெற் றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினர். இதனால் வீராங்கனை மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக