மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறப்பு!
திருப்பத்தூர் , 7 -
திருப்பத்தூரில் 56 கோடி ரூபாய் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் தேசிய சுகாதார குழும நிதியில் சுமார் 56 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு கட்டியுள்ள நிலையில் இன்று அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தை தமிழக முதலமைச் சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பின்னர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, சட்டமன்ற உறுப்பி னர்கள் நல்லதம்பி, தேவராஜ் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். மாவட்ட சேர்மன் என்கேஆர் சூரி குமார். திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்க டேசன். ஒன்றிய செயலாளர்கள். முருகேசன். குணசேகரன். மோகன்ராஜ். பொதுக்குழு உறுப்பினர் அரசு. மாவட்ட மருத்துவ அலுவலர். ஆகியோர் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தனர்.
பின்னர் அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
உடன் மருத்துவ துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக