பிச்சிவிளை தெற்கு தெரு ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் புரட்டாசி கொடை விழா பூங்கரகம் எடுத்து வந்த பக்தர்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 அக்டோபர், 2025

பிச்சிவிளை தெற்கு தெரு ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் புரட்டாசி கொடை விழா பூங்கரகம் எடுத்து வந்த பக்தர்கள்.

பிச்சிவிளை தெற்கு தெரு ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் புரட்டாசி கொடை விழா பூங்கரகம் எடுத்து வந்த பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் பிச்சிவிளை தெற்கு தெருவில் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி கொடை விழா கடந்த 30ஆம் தேதி கால் நட்டு விழா வுடன் தொடங்கியது. நேற்று திங்கட்கிழமை காலை கணபதி ஹோமம், இரவு திருவிழா பூஜை நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை புதூர் விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. 

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மதியம் 1மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல் நடைபெற்றது. இரவு வில்லிசை , முளைப்பாரி எடுத்து வருதல் ,கும்மி அடித்தல் ,கும்பம் எடுத்து வருதல் நடக்கிறது. நள்ளிரவு1 மணிக்கு வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க அம்மன் சப்பர பவனி வருதல் நடக்கிறது. 

புதன்கிழமை காலை 9 மணிக்கு முளைப்பாரி பாட்டு பாடுதல் ,மதியம் 1 மணிக்கு அம்மன் சிறப்பு பூஜை மஞ்சள் நீராடுதல் ,அம்மன் திருவீதி உலா, படைக்கஞ்சி படைத்தல் ,இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, அம்மன் திரு வீதி உலா நடக்கிறது. விழாவில் வியாழக்கிழமை மதியம் வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. 

விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் செல்வன் மற்றும் உறுப்பினர்கள் மனோகரன், கண்ணன், செல்வகுமார், பொன்சிங், வீரக்குமார், உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad