தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அற்புத நகரில் உள்ள அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டு பெருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தெற்கு கள்ளிகுளம் பனி மாதா மெட்ரிக் பள்ளி பங்கு தந்தை மணி அந்தோணிசாமி கொடி ஏற்றி வைத்து மறையுரை வழங்கினார்.
விழாவையொட்டி தினமும் காலை திருச்செபமாலை பவனி ,நவநாள் திருப்பலி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 9 ம் நாள் திருவிழாவான நேற்று மாலை 6:30 மணிக்கு சாத்தான்குளம் மறைமாவட்ட முதன்மை குரு செல்வ ஜார்ஜ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது.
இதில் பாளையங்கோட்டை மறை மாவட்டம் ஜோமிக்ஸ் மறையுரை வழங்குகினார். . இரவு 10 மணிக்கு அதிசய ஆரோக்கிய அன்னையின் அற்புத சப்பர பவனி நடந்தது. 10 ம் பெருவிழாவான இன்று கூட்டு திருப்பலி, உறுதிப்பூசுதல் அருட் சாதனம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடந்தது. இதில் 140 குழந்தைகள் உறுதி பூசுதல் எடுத்தனர். திவ்ய நற்கருணை பவனி, மேலும் இரவு 9 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை லாசர் மற்றும் திருவிழா பணிக்குழுவினர், நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக