ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்வதற்கான அறிகுறியுடன் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது ஆனால் மழை பெய்யவில்லை .
இதற்கிடையே ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்த பூ மங்கலத்தில் மதியம் இரண்டு மணி அளவில் பயங்கர இடி முழக்கத்துடன் பலமுறை மின்னல் வெட்டியுள்ளது சில விநாடிகளில் பச்சை தென்னை மரம் ஒன்றின் கொண்டையில் இடி விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
மின் கம்பத்தில் மின்னல் தாக்கியதால் பல வீடுகளில் டிவி ஃபேன், இன்வெர்ட்டர், செட்டாப் பாக்ஸ்கள் ஃபிரிட்ஜ் போன்ற மின்சாதனங்கள் செயல் இழந்து உள்ளன. சில வீடுகளில் பல்பு விளக்குகள் வெடித்து சிதறியதாக கூறுகின்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசு முறையாக ஆய்வு செய்து சேதமானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக